Introduction to Sivamurugumalai

Introduction to Sivamurugumalai
God's mercy actions happening at all times. This Sivamurugumalai (religious poetic songs) is one among them.  By God's grace and Guru's grace author Shri S. Kuppuswamy ayya blessed to see these songs in his mind. Author is not thinking ,composing and writing these songs but directly getting it from the Almighty. On auspicious days he is getting  each song during  midnight time. Illuminated words  appear in author's mind,and he immediately note it down in a notebook. Author is a sincere devotee of Lord Subramaniya.. Most of these songs are about Lord Subramaniya and Lord Shiva.
These songs are in Tamil language. Author compiled and published these songs. This miracle happening since  22-04-2004 on wards. For more information please see the Author page.

சிவமுருகுமலை ஒரு அறிமுகம்

திருமுருகப்பெருமானின் அருளாளர் ஆரணிஅடியார்க்கு அடியார்  திரு சா.குப்புசாமி அய்யா அவர்களின் உள்ளத்தில் குருவருளாலும் திருவருளாலும் அருளப்பெற்ற இப்பாடல்கள் இறைவனின் திருவருட்செயலையும் பேரருட்கருணை திறத்தையும் வெளிப்படுத்தும் நிகழ்வாக அமைந்துளன.

இப்பாடல்கள்  ஆசிரியர் இயற்றி எழுதாமல், அவருக்கு  நேரடியாக அருளப்படுகின்றன எனும் இவ்வதிசியத்தை கண்டு இறைவனின் அருளிச்செயலை போற்றுவோமாக.

கிருத்திகை,சஷ்டி, பிரதோஷம் மற்றும் பௌர்ணமி போன்ற  முக்கிய நன்நாட்களில்  நள்ளிரவில், ஒவ்வொரு பாடலும் ஒளிமிகுந்த எழுத்துக்களோடு கூடிய பாடல் வரிகளாய் தோன்றி அருளப்படுகின்றன.

ஆசிரியர் இதனை எழுதி தொகுத்து புத்தகங்களாக வெளியிட்டுள்ளார். இப்பாடல்கள் மிகுதியாக முருகப்பெருமானையும் சிவபெருமானையும் போற்றுகின்றன.

தணிகை முருகன் அருள் மாலை  எனும் புத்தகம் முதலில் வெளிவந்தது. ஆசிரியர் தீவிர முருகபக்தர். திருப்புகழ் தேவாரப் பாடல்களை தினமும் ஓதி வழிபடுபவர்.

ஆசிரியரின் பண்டைய தவப்பயனாலும், அவரது குருவாகிய "திருப்புகழ் செம்மல்"  திரு. தண்டபாணி  சுவாமிகள் அருளாலும் இத்திருவருட்ச்செயல் நிகழ்ந்துகொண்டிருக்கின்றன.

தொன்மையான தமிழ் மொழியின் ஆழ்ந்த  மற்றும் கடினமான இலக்கண மரபுக்குட்பட்டு சந்தம், நடை, தொடை, அணி, சொல்நயம்  மற்றும்  பொருட்செறிவுடன் இப்பாடல்கள் அமைந்துள்ளன
.
இலிங்கஅட்சரமாலை பாடல்கள் சித்திரகவி மரபுக்குட்பட்டதாகும்.  திருஞானசம்பந்தர் அருளிய திருஎழு கூற்றிருக்கை எனும்  சித்திரகவி மிக பிரசித்தமாகும்.

இறைவனை பாடலின் நிறைபொருளாக கொண்டு அருளியல் நிலையில் பாடப்பெற்ற இப்பக்தி  பனுவல்களை போற்றி பாடி பரவி இறைவனின் அருளை பெறுவோமாக.

Comments